கே.ஐ.டி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகவும், இன்ஃபோசிஸ் லிமிடெடின் ஏ.வி.பி & எச்.ஆர் வணிகத் தலைவர் சுஜித் குமார் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., மாணவர்களிடம் உரையாடிய போது, புதிய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். லட்சியத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு கலையை தேர்ந்தெடுத்து அதில் முழு கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை கூறினார். அதற்கு உடல் வலிமை மிகவும் முக்கியம் என்றும் அதுதான் மன வலிமைக்கு வழிவகுக்கும் என்றார். தொழில்நுட்பம் எப்போதும் நடுநிலையானது. செல்போனை நம் வாழ்க்கை நலனுக்காக பயன்படுத்துங்கள். சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கவும் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர் போதை பழக்கத்துக்கு அடிமை ஆவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

கௌரவ விருந்தினர் சுஜித் குமார் மாணவர்களிடம் உரையாடிய போது, மாணவ மாணவிகள் புத்தக புழுவாக இருக்காமல் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். பொறியியல் படிப்பில் அணைத்து துறைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது அதற்க்கு தகுந்தவாறு நாம் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போது பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். இறுதியாக மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கனவுகளை நினைவாக்க வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

மேலும், இதில் துணைத் தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.