ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் ஆப்ஸ்கள்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது முதல், ப்ளூ டிக்கிற்க்கு எட்டு டாலர் கட்டணம் வசூலிப்பது வரை யாரும் எதிர்பாராத மாற்றங்களை  சில நாட்களாக ட்விட்டர் கண்டுள்ளது.

மேலும் இது போன்ற செயல்களால் ட்விட்டரின் மீது அதிருப்தி அடைந்த பல்வேறு பிரபலங்களும், சராசரி ட்விட்டர் யூசர்களும் இதற்கு மாற்று ஆப்ஸ்களை நோக்கி சென்றுள்ளனர்.

அந்த வகையில் ட்விட்டருக்கு மாற்றாக கிடைக்கும் வேறு பல ஆப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்

கூ:

இந்திய சமூக வலைத்தளமான கூ என்ற ஆப்   கூகுள் பிளே ஸ்டோரில் கிட்டத்தட்ட ஒரு கோடி டவுன்லோடுகளுக்கு மேல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் அம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ட்விட்டரை ஒத்துள்ளதால் ட்விட்டருக்கு மாற்றாக செயலிகளை தேடும் யூசர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும்.

குதும்ப்:

ரெட்டிட், கோரா போன்ற சமூக வலைத்தளங்களை போல குதும்ப் என்பதும் ட்விட்டருக்கு மாற்றாக இருக்கும். இந்திய மொழிகள் பலவற்றிலும் யூசர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளவும் இந்த ஆப் பயன்படுகிறது.

மாஸ்டோடான்

முக்கிய இடத்தை பிடிப்பது இந்த ஆப் தான். மிக சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான புதிய யூசர்களை இந்த ஆப் பெற்றுள்ளது என்று அதன் தலைமை டெவலப்பர் மற்றும் சிஇஓ-வான யூஜின் ராக் ஷோ தெரிவித்துள்ளார்.

இதன் யூசர் இன்டர்ஃபேஸ் 50% ட்விட்டரையும் 50% பேஸ்புக்கையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கினால் எப்படி இருக்குமோ, அந்த வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மாஸ்டோடான் ஒரு முக்கிய செயலியாக இருந்து வருகிறது.

டிரைபல்:

இந்த ஆப் மற்ற ஆப்ஸ்களில் இருந்து சிறிது மாறுபட்டு இருக்கும். இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் பதிவுகள் எந்தெந்த வகையான மக்களை சென்று சேர வேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் செய்யலாம்.

மேலும் உங்கள் நியூஸ் ஃபீடை மாற்றி அமைப்பதுடன், முடிவற்ற ஸ்க்ரோலிங் வசதியையும் இந்த ஆப் அளிக்கிறது.

ட்விட்டரின் குழந்தை போலவே இருக்கும் இந்த டிரைபலில் ட்விட்டரில் உள்ள அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்ததாக இந்த ஆப்சையும் எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் நம்ப தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.

கோஹோஸ்ட:

பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டது இது ஒரு வகையில் பேஸ்புக்கை போலவும் மற்றொரு வகையில் ஒரு பிளாகிங் வலைதளத்தை போலவும் தோற்றமளிக்கும்.

ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்ன வென்றால்  தற்போது இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்பானது எதிர்காலத்தில் சந்தாவின் அடிப்படையில் தனது சேவைகளை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

– பா. கோமதி தேவி