சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக சர்க்கரை நோய் என அழைக்கப்படும் நீரிழிவு நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயை கட்டுக்குள் வைத்திருக்க மருந்து, மாத்திரைகளுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், வாழ்கை முறையும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் எந்தவிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து சில பயனுள்ள குறிப்புகள் அளிக்கிறார் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் சிவஞானம்.

முதலில் மசாலா தடவிய சுவையான ஸ்நாக்குகளைத் தவிர்த்து உப்பு இல்லாத நட்ஸ்கள், மசாலா சேர்க்காத பாப்கார்ன், ஃபிரெஷ் பழங்கள், தயிர், முதலானவை எடுத்துக்கொள்ளவேண்டும். ஹோட்டலில் உணவருந்தும் போது ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்யவேண்டும். பன்னீர், சிக்கன், மீன், சாலட் முதலானவற்றை எடுத்துக் கொள்ளலாம். சிறு அளவுகளில் முழு தானியத்தில் செய்த கார்போஹைட்ரேட் உணவு  சாப்பிடலாம்.

உணவில் ஒரு வரிசை முறையைப் பின்பற்ற வேண்டும். முதலில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் அதன்பிறகு கார்போஹைட்ரேட் உணவு வகைகள். ஒரு கப் சூப் அல்லது சாலட் எடுத்துக் கொள்ளலாம். வெண்ணெய் தடவிய பிரெட்டுக்கு பதிலாக பிளெய்ன் பிரெட் பயன்படுத்தவும். அதேபோல் தால் தட்கா மக்கானிக்கு பதிலாக பிளெய்ன் பருப்பு, ஜீரா ரைஸ்/புலாவ்/பிரியாணிக்கு பதில் வேகவைத்த சாதம். அதே போல முந்திரி பருப்பு கிரேவி/கிரீமி கிரேவிக்கு பதில் வெங்காயம், தக்காளி வெஜிடபிள் கிரேவி பயன்படுத்துவது சிறந்தது.

உப்பை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்த உடனடி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். இனிப்பான பானங்களத் தவிர்த்து சர்க்கரை இல்லாத, கலோரி குறைவான எலுமிச்சம் பழச்சாறு, ஜல் ஜீரா முதலான பானங்கள் அருந்தலாம். அனைத்திலும் சிறந்தது சாதாரண நீர்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனைத்துவிதமான சர்க்கரை நோய்களுக்கும் தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளித்திட அனைத்து நவீன வசதிகளும் உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கென ஒரு பிரத்யேகத் துறை செயல்பட்டு வருகிறது. இதில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சிகிக்சைகள் அளித்துவருகின்றனர் என்று கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி, உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கே.எம்.சி.ஹெச் டயபடிக் சென்டர் வெளிநோயாளிகள் துறை, அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இந்த மையத்தில் நோயாளிக்கு தேவைப்பட்டால் எகோ, ஈசிஜி, ட்ரெட்மில் முதலான இருதய நோய் பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: டாக்டர் சிவஞானம், நீரிழிவு சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை.