சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தயாரா? – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி சார்பில் சுகாதார அலுவலர்‌ பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 19ஆம் தேதி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.2.09 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதாரப்‌ பணிகளில்‌ அடங்கிய சுகாதார அலுவலர்‌ பதவிக்கான காலிப்‌ பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்விற்கு இணைய வழி மூலம்‌ மட்டும் விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித்‌ தேர்வாக நடத்தப்படும்‌.

காலிப்‌ பணியிடங்கள்‌ பற்றிய விவரங்கள்‌ – 12

பணியின்‌ பெயர்‌ – சுகாதார அலுவலர்‌ (Health Officer)

பதவியின்‌ பெயர்‌ – தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகள் (Tamil Nadu Public Health Service)

ஊதியம்:‌ ரூ. 56,500- ரூ.2, 09,200

வயது வரம்பு: (01.07.2022 அன்றுள்ளபடி)

பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம், எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை

உச்ச வயது வரம்பு இல்லை என்றால்‌ விண்ணப்பதாரர்‌ விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளன்றோ, பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நாளன்றோ மற்றும்‌ பதவியில்‌ அமர்த்தப்பட்ட நாளன்றோ 60 வயதினை பூர்த்தி செய்திருக்ககூடாது.

கல்வித் தகுதி

* டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவ ஆணையத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

* தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

* பொது சுகாதாரத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றவராகவோ(Social and Preventive Medicine/ Community  Medicine-ல் ) முதுகலைப் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டியது அவசியம்.

பதிவுக் கட்டணம்: ரூ.150  ,  தேர்வுக் கட்டணம்: ரூ.200