இந்துஸ்தான் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும், புதுமை மற்றும் படைப்பாற்றலுடன் தொழில்நுட்ப ரீதியாக வலுவான மாணவர்களாக உருவாகி கல்லூரிக்கும் சமூகத்திர்க்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் திகழ வேண்டும் என கூறினர்.

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் நடராஜன், ஆகியோர் கல்லூரியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் பொறியியல் துறையில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும், மாணவர்கள் தேர்வு செய்த துறைகளின் சிறப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு குறித்த பல்வேறு கருத்துக்கள் துறை தலைவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மாணவர்கள் வடிவமைத்த ஹுமனாய்ட் ரோபோவை பார்வையாளர்களுக்கு குறுகிய டெமோ மூலம் அறிமுகப்படுத்தினர். பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று, பரிசுகளைப் பெற்றுத் தந்த இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் தலைமை ஏற்று, மாணவர்கள் தங்கள் நான்கு வருட பட்டப்படிப்பை தொழில்நுட்ப திறன்களுடனும், நேரிய ஒழுக்கத்துடனும் பயின்று நாட்டின் சிறந்த மாணவர்களாக விளங்க வாழ்த்துரைத்தார்.

மேலும் முதலாம் ஆண்டு கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களில் சுய கற்றல் டிஜிட்டல் பாட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் பாராட்டப்பெற்றனர்.

நிகழ்வில் பேராசிரியர்கள், புதிய மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.