ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

Customer Service Executive

காலியிடங்களின் எண்ணிக்கை: 144

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,100

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.11.2022 & 13.11.2022

Utility Agent cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,350

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 14.11.2022

Handyman

காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,520

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 15.11.2022 & 16.11.2022

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department, Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600043

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf