எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனம் சார்பில் பக்கவாதம் விழிப்புணர்வு

குமரன் மெடிக்கல் சென்டர் மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘பக்கவாத விழிப்புணர்வு ஓட்டம்’ குமரன் மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாள் உலக பக்கவாத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த பக்கவாத விழிப்புணர்வு ஓட்டம் நடைப்பெற்றது.

இதில் 140 ஆண்கள் மற்றும் பெண்கள் 10 கி.மீ ஓட்டதில் கலந்துகொண்டனர். மேலும் 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் சுமார் 160 போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

முதல் நிகழ்வாக நரம்பியல் துறையின் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்
சந்தானம் பக்காவாதத்தின் பிரிவுகள் பற்றியும் பக்கவாதத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்தினார்.
மேலும் பாதிக்காமல் தம்மை காப்பாற்றி கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் உறுதுணையான மருத்துவ ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். மாரத்தான் ஓட்டம் பக்கவாதத்திற்கு எவ்வாறு தொடர்புடையது என்று விளக்கினார்.

நரம்பியல் நிபுணர் மருத்துவர் கௌசிக் பக்கவாதத்தின் நேரம் தவறாமையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி அதன் ஆபத்து குறித்து விளக்கினார்.