என்.ஜி.பி கல்லூரியில் தொழில்நுட்ப போட்டி

டாக்டர். என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியான ‘எரிசக்தி தூதர் 2022’ தொடக்க விழா நடைபெற்றது.

இந்திய எரிசக்தி மேலாண்மை வல்லுநர்கள் சங்கம், கோயம்புத்தூர் பிரிவு மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸியும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தது.

இந்த தொடக்கத்தை என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரி, பி.எஸ்.பி.பி மில்லினியம் பள்ளி மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

தலைமைப் பொறியாளர்/விநியோகம், கோயம்புத்தூர் மண்டலம் டேவிட் ஜெபசிங் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், மின் ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் ஆற்றல் மேலாண்மை, டிஜிட்டல் மீட்டர்களின் பயன்பாடு மற்றும் பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மின் ஆற்றலைச் சேமிக்கவும், மின்னின் வளங்களை காப்பாற்றவும் பங்கேற்பாளர்களை அவர் மிகவும் ஊக்கப்படுத்தினார்.

ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி தலைவர் ரகு வரவேற்றார். என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பிரபா மாணவர்களை மின் ஆற்றலைச் சேமிக்க ஊக்குவித்தார்.

கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள 52 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 600 பொறியியல் கல்லூரி மாணவர்களும், சுமார் 22 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 175 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.