சங்கரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விப்ரோ லிமிடெட்-ன் இந்தியாவின் தேசியத் தலைவர் ராதிகா ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கல்யாணராமன் மற்றும் பட்டாபிராமன், கல்லூரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் எட்வர்ட் பெர்னார்ட் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பட்டங்களை பெற்றனர்.