ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி மற்றும் துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினர்.

முதலாம் நாள் விழாவிற்கு கோவை, கேமரூன் ஸ்க்லம்பெர்கரின் தகவல் தொழில்நுட்ப மையத் தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை திறம்பட தொடங்குமாறு ஊக்குவித்தார்.

முதல் தலைமுறை தகவல் தொழில்நுட்ப நிபுணராக தனது அனுபவத்தை எடுத்துக்கொண்ட அவர், மாணவர்களை கல்வியில் சிறப்பாகச் செயல்படுவதற்கும், நல்ல வேலைகளைப் பெறுவதற்கும் பட்டபடிப்பினை ஒரு வழியாகக் கருதாமல், அறிவைப் பெறுவதற்கும், மனிதர்களாக முன்னேறுவதற்கும் ஒரு போர்ட்டலாகப் பார்க்குமாறு அவர் ஊக்குவித்தார்.

இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு பெங்களூருவை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனத்தின் பொறியியல் துறை துணைத் தலைவர் சுமித்ரா ரங்கநாதன் கலந்து கொண்டு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைப் பற்றிய நுட்பமான தரவு புள்ளிகளை கேப்ஜெமினியின் விளக்கக்காட்சியுடன் பகிர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இக்கல்லூரியில் 1998 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களான இன்டெல் மென்பொருள் பொறியியல் இயக்குனர் பாலசந்தர், சென்னை, கிளவுட் பிரிங்க் நிறுவனத்தின் மூத்த முதன்மை பொறியாளர் மகேஷ் சிங், சென்னை, ட்ராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்கியூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையின் உதவி தலைமை பொறியாளர் தங்கமலர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைத்தது.