தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாமரை மலர வேண்டும்.

வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகத்தின் வறட்சி காரணமாக பல விவசாய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் இல்லை. விவசாய கடன்களினால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக அறிவிக்க வேண்டும், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பற்றி பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:

விவசாயம் நம் நாட்டின் அஸ்திவாரம். அதன் மேல் எங்களுக்கு மிகவும் அக்கறை உள்ளது. நானும் விவசாய குடும்பப் பெண் தான்.

தமிழ் விவசாயிகள் ஏன் தமிழக முதலமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தாமல், டெல்லி சென்று பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரதமரை பார்க்காமல் எங்களது போராட்டம் ஓயாது என்று ஏன் கூறுகின்றனர்.

இதில் கண்டிப்பாக அரசியல் சாயம் இருக்கின்றது. பாரத பிரதமர் நரேந்திர  மோடி மீது அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த பிரச்சனையை பெரிதாக்கி வருகின்றனர்.

பாரத பிரதமர் மோடி விவசாய அட்டை, கடன் அட்டை இன்னும் எவ்வளவோ நல உதவிகளை செய்து வருகிறார். ஏன் விவசாயிகள் அதை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள். எங்களுக்கு தமிழக விவசாயிகள் மேல் அக்கறை உள்ளது.

அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அந்த விஷயத்தில் முதன் முதலாக பாரதிய ஜனதா அரசு தான் அந்த திட்டத்தை கொண்டு வந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

காவிரி நீர் பிரச்சனையை பற்றி பிரதமர் கண்டுகொள்ளவில்லை என்று சொல்கின்றனர். நாம் எப்படி காவிரி நீர் கேட்கிறீர்களோ, அதே போல், அந்த மாநிலமும் கொடுக்க மாட்டோம் என்று சொல்ல அதிகாரம் இருக்கிறது. அதற்காக நாங்கள் இதை இப்படியே விட்டு விட மாட்டோம். தண்ணீருக்கும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும். நீங்கள் உடனே என்னிடம் கேட்கலாம், மற்ற மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லை என்று, அங்கேயும் நாங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைத்து நதிகளை இணைத்து, தண்ணீர் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று மிக ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலத்தில் நதிகளை இணைத்தார்கள் என்றால், அங்கு பாஜக அரசு இருந்ததனால் மட்டுமே முடிந்தது. ஏன், அதிமுக அரசை பண்ண சொல்லுங்கள் பார்ப்போம். முடியாது. ஏனென்றால் தன்னுடைய பதவிகளையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே நேரம் சரியாக இருக்கின்றது.

கேரளாவில் 15% ஓட்டு வாங்கிட்டோம். அடுத்த முறை கண்டிப்பாக ஆட்சியை பிடிப்போம்.

உடனே, காவிரி பிரச்சனை களை பற்றி பேசுகிறீர்கள், பிரதமர் அவர்கள் தண்ணீர் தரமாட்டிங்கிறீர் என்று குறை கூறுகிறோம். காவிரி என்பது ஒரு பகுதி, காவிரி தண்ணீர் கோயம்புத்தூருக்கும், திருவண்ணா மலைக்கும் வருதா? உடனே காவிரி தண்ணீர் வரலன்னு போராட்டம் பண்றோம். ஆனால் நம்ம நொய்யல் ஆற்றை கவனிக்காமல் இருக்கிறோம்.

நதிகள் இணைப்பு மற்றும் தண்ணீர் பிரச்னைக்கு ஒரே தீர்வு பாஜக அரசு ஆட்சியை பிடித்த பிறகு தான் அமையும். மிக விரைவில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்போம்.