கேம்ஃபோர்ட் இன்டர்நேசனல் பள்ளியில் 13வது ஆண்டு விழா

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்ட் இன்டர்நேசனல் பள்ளியில் 13வது ஆண்டுவிழா மற்றும் நிறுவனர் தின விழா நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி கலந்து கொண்டு, நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவின் கல்வி முறை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டுள்ளது. மாணவர்களின் கல்வி பெரும்பாலும் செய்முறைவடிவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாணவர்கள் தங்கள் கல்வியோடு தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்தில் இருப்பதைக்கடந்து மாணவர்கள் கற்க வேண்டும். மதிப்பெண்களை கொண்டு மாணவர்களின் திறனை கணக்கிடக்கூடாது. என பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், தலைமையாசிரியை பூனம் சியால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.