ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஸ் சர்க்கார், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி அம்மையார்  பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இதில் 1,037 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். தொடர்ந்து ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

இன்று பட்டம் பெறும் நீங்கள் நாளைய தலைவர்கள். இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க பாடுபட வேண்டும். தேசிய கல்வி கொள்கை மாணவர்கள் தங்களுக்கான கல்வியை சுதந்திரமாக தேர்வு செய்ய உதவுகிறது.

புதிய தொழில்களுக்கு அரசு உறுதுணையாக உள்ளது. மேலும் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் சுலபப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறந்த கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்திற்காக நாம் இலக்குகளை கொண்டு பயணித்து வருகிறோம்.

புதிய தொழில் யோசனைகளுடன் வரும் இளைஞர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளது.

முயற்சி செய்து கொண்டே இருங்கள் உங்கள் இலக்கு அருகில் தான் உள்ளது.

உங்கள் பணி சிறியதோ பெரியதோ அதில் சிறப்பாக செயல்படுங்கள். கல்வி இதோடு முடிந்துவிடாது.

நாட்டையும், வீட்டையும் பெருமைப்படுத்துங்கள்.

மேலும் பட்டமளிப்பு விழாவில்  சித்தூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் பாலசுப்ரமணியம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, நிர்வாக அறங்காவலர் ஆதித்யா, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.