தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்..!

கோவை: சட்டிஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தடகளப்போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி, இரண்டு பதக்கங்கள் வென்றார்.

பிலாஸ்பூரில் நடந்த அதலெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், ‘2வது தேசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப்போட்டி’ நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

அதில் 100மீ., 200மீ., 400மீ., ஓட்டம், நடையோட்டம், தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்றது.

இக்கல்லுாரியின், பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒலிம்பா ஸ்டெபி போட்டியிட்டு 400மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.  இதேபோல், 400மீ தடையோட்டத்தில்,வெள்ளிப்பதக்கமும் வென்றார்.