ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை சென்னை நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் சாமுவேல் செல்லையா வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் ஓட்டம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன், சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மாநில அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.