உடல் ஆரோக்கியத்தை காக்க வலியுறுத்தி கதிர் கல்லூரி சார்பில் மினி மாரத்தான்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 கிலோமீட்டர் தூரம் மினி மாரத்தான் ஓட்டத்தில் கதிர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் முன்னேற்றப் பிரிவு சார்பில் பிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.2 என்ற பெயரில் மினி மாரத்தான் நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் நிகழ்வை கல்லூரி முதல்வர் மற்றும் நீலாம்பூர் ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தனர்.

இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். அப்போது உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிவாறு 2 கிலோமீட்டர் தூரம் சென்று ஓட்டத்தை நிறைவு செய்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறும்போது, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் போது கிராமங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமான மனநிலையை பெறுவார்கள். ஆரோக்கியத்தை பேணுவதற்காக கிராம மக்கள் ஒன்று இணைந்து செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

கிராம மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மினி மாரத்தான் நடத்தப்பட்டுள்ளது எனவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உதவும் அரசு நிர்வாகக்கங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.