ஊட்டி சாலையில் காட்டு யானை கூட்டம் உலா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் இன்று காலையில் பரபரப்பான ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானையை கண்டவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பின்னர் சற்றுநேரத்தில் யானை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். அதன் பின்னரே தங்களது வாகனத்தை எடுத்துச்சென்றனர்.

வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் தங்களது வாகனத்தை இயக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.