ஆவினில் தீபாவளி இனிப்புகள் ரூ.116 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.116 கோடிக்கு ஆவின் பொருட்களின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிக்கைக்காக ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு 82 கோடி 24 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

எனினும், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனையாகி உள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும்.