கே.எம்.சி.ஹெச் கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம்

கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம் 2022 கொண்டாடப்பட்டது. இதில் கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சசிதர் ராவ் வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல்முறை மருத்துவத்துறை தலைவர் சுஜாதா மிஷல் “பிரைன் ஜிம்” பற்றி மாணவ மாணவிகளுக்கு கருத்தரங்கம் வாயிலாக எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.