அக்டோபர் 30 வரை புரோசோன் மாலில் தீபாவளி சிறப்பு விற்பனை

புரோசோன் மால், நள்ளிரவு ஷாப்பிங் திருவிழாவை கடந்த வியாழன் முதல் துவங்கியது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இரவு 11.00 மணி வரையும். சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இரவு 12.00 மணி வரையும் விற்பனை இருந்தது.

தீபாவளியை சிறப்புடன் கொண்டாட பொருட்களை வாங்க சிறப்பு தள்ளுபடியையும் பல பரிசுகளையும் வழங்கி வருகிறது புரோசோன் மால். கடந்த அக்டோபர் 15 முதல் வரும் அக்டோபர் 30 வரை புரோசோன் மாலில் பொருட்கள் வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள், தள்ளுபடி, சலுகைகள் உள்ளன. ரூ.4999- மேல் பொருட்கள் வாங்குவோருக்கு பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன. ரூ.9999- மேல் வாங்குவோருக்கு 1000 ரூபாய்க்கான வவுச்சர் மற்றும் நிச்சய பரிசுகள் உள்ளன.

முதல் பரிசாக ஸ்டெர்லிங் ரிசார்ட் நிறுவனம் வழங்கும் குடும்பத்துடன் மலேசிய சுற்றுப்பயணம், இரண்டாவது பரிசாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கும் டிவிஎஸ் ஜுப்பிடர் இரண்டு சக்கர வாகனம், கோடக் பாங்க் வழங்கும் தங்க நாணயங்கள் பரிசுகள் மேலும் ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் என மொத்தம் 10 – லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அக்டோபர் 22 – ம் தேதி புகழ்பெற்ற மேளதாள கலைஞரான சினாய் தேவதாஸ் மற்றும் டாக்டர். டி.ஜெ குழுவினரின் லிக்யூட் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினம் தினம் புதுமையான நிகழ்வுகளும் புரோசோன் மாலில் நடக்கின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோரின் முடிவுகள் 2022 அக்டோபர் 30 அன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.