என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்

டாக்டர்.என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் சிறப்பு துணை ஆய்வாளர் தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டு கோவை மாநகர காவல் ஆணையரால் தொடங்கப்பட்ட ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.

கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன் மாணவிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, போதைப்பொருளின் விளைவாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருளின் விளைவுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இக்கல்லூரியின் ‘காவல் அக்கா’ திட்டத்தின் பொறுப்பாளரான தனலட்சுமி பேசுகையில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்கப்படவேண்டும். மாணவர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க காவல்துறையினரிடம் வலுவான பிணைப்பை ஏற்படுத்தவேண்டும். பெண்களின் உரிமைகளை ஆதரித்த மற்றும் ஆண் பேரினவாத சமூகத்திற்கு எதிராக போராடிய மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி போல பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இந்த மனநிலை மாற்றம் பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.