ஆர்.வி. கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் உள் தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் சார்பில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். பஜாஜ் அலயன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை கிளை மேலாளர்களான வீராசாமி, மணிகண்டன், சுவாதி, ராகுல் மற்றும் மூர்த்தி பங்கேற்று இந்த நேர்காணலை நடத்தினர்.

வணிகவியல், தொழில் சார் வணிகவியல், கணினிசார் வணிகவியல் துறையில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மொத்தம் 63 பேர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற நேர்காணலில் முதல் சுற்றில் 22 பேரும், இரண்டாம் சுற்றில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.