என்.ஜி.பி கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் ஹரிதா டெக்லாஜிக்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லுாரியின் செயலாளர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் ஹரிதா டெக்னாலஜியின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் பிரசாந்த்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமானது மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கேற்ற பாடத்திட்ட வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், மாணவர்களின் தொழில் வாய்ப்புக்கேற்ற புதிய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு தொழில்துறை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.

மேலும் கல்லூரி முதல்வர் பிரபா தெரிவிக்கையில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புக்காக
நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியானது மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் ஜெகநாதன், ஹரிதா டெக்னாலஜிஸ்ன் மேலாளர் அரவிந்த் முருகானந்த், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தேறியது.