ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ரூ.11 லட்சம் கல்வித் தொகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை ரத்னா ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் வசந்த் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் செயலாளர் தாமஸ் ரெனால்ட் சங்கத்தின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் ஆண்டறிக்கையாக வாசித்தார். கல்லூரியின் முதல்வர் அலமேலு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவின் ஒரு நிகழ்வாக இப்போது பயின்று கொண்டிருக்கும் 35 மாணவ மாணவியருக்கு ரூபாய் பதினோரு லட்சம் கல்வித்தொகை வழங்கப்பட்டது. அதில் ஏழு பேருக்கு ஓராண்டிற்க்கான கல்வித் தொகை முழுவதும் முன்னாள் மாணவர் சங்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவியருக்கும், கல்லூரிக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விருதுகள் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் விழா மலராக கல்லூரியின் முதல்வர் வெளியிட சங்கத்தின் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். மேலும், விழாவின் எதிர் வரும் காலத்தின் பொதுக்குழுவின் புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.