பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பின்னணி குரல் பயிற்சி பட்டறை

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் வாய்ஸ் ஸ்டெஜர் சார்பில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காலா, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த ஜிஜி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பின்னணி குரல் எப்படி கொடுப்பது என்பது குறித்தும், அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வழங்கினார்.

ரிஜினல் ஸ்டோரி டெல்லர்ஸ் நிறுவத்தின் தலைவர் வெங்கி மற்றும் சித்ரா வெங்கி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் சிட்டி பாபு மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.