பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு

கோவை பிளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 62வது பொது குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் வரவேற்புரை வழங்கினார்.

பொதுச்செயலர் அரசு 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.

பொருளாளர் சுந்தரம் 2021-2022 ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஏ.வி.வி குழுமத்தின் தலைவர் ஏ.வி.வரதராஜன் முன்னாள் மாணவர் சங்கத்தின் செய்தி மடலை வெளியிட்டார்.

பின்னர் பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக எம்.எம். கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ரோட்டரியன் மயில்சாமி பதவியேற்றுக்கொண்டார்.

இறுதியாக சங்கத்தின் முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் புதிய தலைவர் மயில்சாமி ஆகியோர் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்தனர்.