ஆர்.வி.கல்லூரியில் வர்த்தகக் கண்காட்சி

காரமடை, டாக்டர்.ஆர் .வி.கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் டிரேடு எக்ஸ்போ 2022 என்ற வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்றார்.

மேட்டுப்பாளையம், ஸ்ரீ லஷ்மி கலெக்க்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ லஷ்மி பேலஸ் திருமண மண்டபத்தின் உரிமையாளர் பூர்ணிமா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் சத்தியமங்கலம் சர்வோதயா சங்கம், செந்தூர்வேல் கலக்க்ஷன்ஸ், சேலம் இளம்பிள்ளை சாரீஸ், ஸ்ரீ ஹோம் டிரெண்ட்ஸ் சாரீஸ், ஸ்ரீ ராகவேந்திரா சாரீஸ் ஆகிய துணிக்கடைகளின் சார்பில் புடவை வகைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், காரமடை, குட்ஷெப்பர்டு சுகாதார கல்வி நிலையத்தின் மகளிர் சுய உதவிக் குழு, அஜீ ஹெல்த் ஸ்டோர், லக்சனா அழகு நிலையம் சார்பில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய மூலிகைப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய விற்பனை நிலையங்கள், மேட்டுப்பாளையம் ஈவா ஆப்டிகல்ஸ் கண் கண்ணாடி கடை, ஐஸ்கிரீம் ஸ்டால் உள்ளிட்ட பதினாறு கடைகள் இடம்பெற்றன.

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்ட இக்கண்காட்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டு பொருட்களை வாங்கினர்.