கே.ஜி செவிலியர் கல்லூரியில் உலக மகிழ்ச்சி தின கொண்டாட்டம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி செவிலியர் கல்லூரியில் உலக மகிழ்ச்சி தினம் (மனநல தினம்) கொண்டாடப்பட்டது. “மனதின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும்” கொண்டாடும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு கோவை கே.ஜி மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கி பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக மகிழ்ச்சி நிபுணர் டாக்டர் பொன்னி முரளிதரன் பங்கேற்றார்.

குழந்தைகள் இயற்கையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருகிறார்கள். 20 சதவீத இந்தியர்கள் (20 கோடி மக்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்) பல்வேறு வகையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மகிழ்ச்சியான மனிதனுக்கு நல்ல மனம் மற்றும் மனம் நிறைந்த சிரிப்பு இருக்கும். அவனது உடல் மொழியே அவன் மகிழ்ச்சியான மனிதன் என்பதைக் காட்டும். மனச்சோர்வடைந்தவர்கள் தற்கொலை போக்கு கொண்டவர்கள். எனவே அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவை உள்ளிட்ட கருத்துக்கள் நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.