5 சுவாரஸ்யமான உண்மைகள்

நொடிக்கு 4 குழந்தைகள்

உலகத்தில் சராசரியாக ஒவ்வொரு நொடியிலும் 4 குழந்தைகளும், நிமிடத்திற்கும் 250 குழந்தைகளும், ஒரு மணி நேரத்திலும் 15,000 குழந்தைகளும், ஒவ்வொரு நாளைக்கும் 3 லட்சத்து மேற்பட்ட குழந்தைகளும் பிறக்கின்றன. மொத்தமாக ஒரு வருடத்தில் சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தில் பிறக்கின்றன.

 சீனா கொடுத்த பாண்டா கரடி

இந்த உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மிருக காட்சி சாலைகளில் பாண்டா கரடியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அத்தனை பாண்டாக்களும் சீனா நாட்டிற்குத் தான் சொந்தம் அதைத் தான் இவர்கள் வாங்கி தங்கள் மிருக காட்சி சாலையில் வளர்த்துக் குட்டி போட வைக்கின்றனர்.

கருப்பான் பூச்சிகள்

இந்த பூமியில் டைனோசர்களின் காலத்திற்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கருப்பான்பூச்சி உயிரினம் வாழ்ந்து வருகிறது.

உலகில் உள்ள அமைதியான இடம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள ‘The Quiet Room’ அதாவது ‘அமைதி அறை’ என்ற அறை தான் இந்த உலகத்திலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும். இந்த அறையில் இருக்கும் ஒலியின் அளவு 20.35 டெசிபல் ஆகும்.இந்த அளவிலான சத்தத்தை சாதாரண மனித காதுகளால் கேட்கவே முடியாது.

மேகத்தின் எடை

ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும்.அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

 

 

Article by : கோமதி தேவி .பா