அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்ஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசின் இறுதிப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு, ரஷ்யாவின் மெமோரியல் அமைப்பு மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மதிப்புகள் அறிந்து செயல்படுதல், ராணுவ செயல்பாடுகளைத் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.