என்.ஜி.பி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக, ‘அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் பிரபா, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் தனது நிபுணத்துவத்தை பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் முக்கியத்துவம், தரவு பகுப்பாய்வு மற்றும் மின் பொறியியலில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சியின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரகுபதி தொடக்க உரையாற்றினார். அதில் மின்சார வாகனதின் பேட்டரி மேலாண்மை அமைப்புகள், ஆன் & ஆஃப் போர்டு, IoT இன் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் தொடங்கினார்.

இக்கருத்தரங்கிற்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் (CSIR) நிதியுதவி அளிக்கப்பட்டது.