தடைகளைத் தாண்டி வரலாற்று சாதனை

நாசா சார்பாக விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் அமெரிக்க பூர்வகுடி விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 45 வயதான நிக்கோல் மான்.

நேற்று (அக். 05) அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து புறப்பட்ட விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் நிக்கோல் மானும் ஒருவர்.

இவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் விண்கலம் சுமார் 29 மணி நேரத்தில் உரிய சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இந்த விண்வெளி திட்டம் வருங்கால பூர்வீக அமெரிக்கர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

பூர்வகுடி அமெரிக்க குழந்தைகள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கவும், ஏற்கனவே உள்ள தடைகள் தகர்த்தெறியப்படும் என்பதை உணர்வதற்கும் இது உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன்,” என நிக்கோல் மான் தெரிவித்துள்ளார்.

“எந்த நேரத்திலும் முதன்முறையாகவோ அல்லது கடந்த காலத்தில் யாரும் செய்யாத ஒன்றையோ நம்மால் செய்ய முடிந்தால் அந்த தருணம் மிக முக்கியமானது,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமது பணிக்காக ஆறு பதக்கங்களை பெற்றுள்ள அவர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார்.