பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (அக்டோபர்) மாதத்தையொட்டி, பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மார்பக புற்றுநோய் நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி புற்றுநோய் மையத்தின் இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிறப்பு அம்சமாக இந்த மாதம் முழுவதும் சலுகை விலையில் மார்பக பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.