அமிர்த வித்யாலயம் பள்ளியில் வித்யாரம்பம் விழா

திருப்பூர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் புதன்கிழமையன்று விஜயதசமி வித்யாரம்பம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை பள்ளி தாளாளர் சுவாமினி முத்தாமிர்தபிரானா அம்மா குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கிவைத்தனர். பள்ளி முதல்வர் வித்யாசங்கர் விஜயதசமி குறித்தும், விஜயதசமியின் சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றி குழந்தைகளின் வித்யாரம்பத்தை துவக்கி வைத்தார். விழாவில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.