Elon Musk உருவாக்கிய எந்திரன்!

எந்திரன் திரைப்படத்தில் வருவது போல புதிய Humanoid Robot ஒன்றை டெஸ்லா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Tesla நிறுவனம் உலகின் பிரபல நிறுவனங்களில் நிறுவனம். அதன்  நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்திலும் உள்ளார்.

இவர் டெஸ்லா நிறுவனத்தை போலவே SpaceX நிறுவனத்தையும் நடத்திவருகிறார். சுற்று சூழல் பாதிக்காதவகையில் பல விஷயங்களை இவர் செய்யக்கூடியவராக உள்ளார். இதில் அடுத்தகட்டமாக எதிர்காலத்தில் பயன்படும் Super Humanoid Robot தயாரிப்பிலும் இவர் ஈடுபடவுள்ளார்.

இந்த ரோபோட் பெயர் ‘Optimus’ இது மேடையில் ஏறியவுடன் எலன் மஸ்க்கை பார்த்து கையசைத்து பின்னர் நடனமாடியது. இது எந்த ஒரு ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் தானாக செய்தது என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பார்ப்பவரை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இதேபோல மில்லியன் கணக்கில் ‘Optimus’ ரோபோட் எந்திரங்களை உருவாக்கமுடியும் எனவும் அவற்றை ஒரு ரோபோட் 20,000 ஆயிரம் டாலர் என்ற விலையில் விற்பனை செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலம் வேறு மாதிரி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல பெண் வடிவ ரோபோட் ஒன்றும் தயாராகும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற வித்யாசமான விஷயங்களை கையில் எடுக்கும் எலன் மஸ்க் முயற்சி எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் செய்த்துவிடுவார் போல என்று தோன்றுகிறது.