கே.பி.ஆர் கல்லூரியில் பட்டுநூல் நகை தயாரித்தல் பயிற்சி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, IQAC மற்றும் நுண்கலை மன்றம் இணைந்து, மாணவர்களுக்கு, “பட்டுநூல் நகை தயாரித்தல்” குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கியது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் பாலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் மற்றும் ஆலோசகர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். இணைப்பேராசிரியரும் IQAC தலைவருமான பிரதீபா வரவேற்புரை வழங்கினார்.

மிலன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் ஃபேஷன் டிசைனர் அர்ச்சனா பிரசாத், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அச்சு களிமண் பொருளைப் பயன்படுத்தி ஜும்காஸ், ஆரம், பதக்கங்கள் மற்றும் காதணி போன்ற ஃபேஷன் நகைகள் செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

பட்டுநூல்களைப் பயன்படுத்தி வளையல்கள் மற்றும் கழுத்தணிகளை உருவாக்கவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தார். நகைகளை சேதத்திலிருந்து பாதுகாப்பதற்கான நுட்பங்களைப் பற்றியும், நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவதற்கான நுட்பங்களைப் பற்றியும் விளக்கினார்.

இப்பயிற்சியில் கே.பி.ஆர் கல்லூரியின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றனர்.