சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து பி.எஸ்.ஜி மருத்துவமனை சாதனை   

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பிறவிலயே இருதயத்தில் குறைபாடு இருந்ததால் சிரமப்பட்டு வந்தான். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்பட்டு உடல் எடை கூடாமல் இருந்தது.

சிறுவனுக்கு (ஏட்ரியல் செப்டல் குறைபாடு) நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. எனவே பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன், சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார்.

தற்போது சிறுவன் குணம் அடைந்து நலமாக வீட்டிற்கு சென்று விட்டான்.

பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சாய் சிட்டி இடையே உள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுவனுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் வசித்து வரும், இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.