செல்வத்தை விட ஆரோக்கியமே சிறந்தது – இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மாணவர்களுக்கான உடல்நலப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

மனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்க்கு உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம் அந்த வகையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர் பிரபாகர் மற்றும் சுதாவெங்கடாசலம் ஏற்பாட்டில் எம்.பி.ஏ மாணவர்களுக்கு உடல்நலப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் எஸ்.ஜி காஸ்ட்ரோ கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் காஸ்ட்ரோ என்டாலிஜிஸ்ட் டாக்டர் கணேஷ் உடல்நலப் பாதுகாப்பு தொடர்பான கருத்துகளை பேசினார்.

இதில் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கையை எப்படி நடத்துவது, குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். மேலும் ஒரு வாழ்க்கையை நடத்த விரும்பினால் செல்வத்தை விட ஆரோக்கியமே சிறந்தது என கூறிய அவர் தொழில் வல்லுனர்களாக ஆவதற்கு உடல் பாதுகாப்பு முக்கியம் என வலியுறுத்தினார்.

இதில் இந்துஸ்தான் கல்லூரியின் மேலாண்மை துறை இயக்குனர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.