இந்துஸ்தான் கல்லூரியில் ஓசோன் தின விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி உயிரி தொழில்நுட்பவியல் துறையில், டிபிடி ஸ்டார் காலேஜ் ஸ்கீம் சார்பில் உலக ஓசோன் தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் மற்றும் செயலாளர் பிரியா சதீஷ்பிரபு தொடங்கி வைத்தனர்.

முதுகலை தொழில்நுட்பவியல் துறை மற்றும் இயற்கை மன்றத்தைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் ஓவியம் வரைந்தனர். ஓசோன் இல்லாத பூமி கூரை இல்லாத வீடு போன்றது என்ற கருத்தை வலியுறுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டது. கல்லூரி முதல்வர், உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் மற்றும் துறை பேராசிரியர்கள் வழிகாட்டல் உடன் நிகழ்வு நடைபெற்றது.