கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 9 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை கே.பி.ஆர் குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கன்சல் ஜெனரல் ஆப் ஜப்பான் தாஹா மசாயுகி கலந்து கொண்டார். இவ்விழாவில் கௌரவ விருந்தினராக மலேசியா நாட்டைச் சேர்ந்த சன்வே பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணை வேந்தர் சிப்ரண்டேஸ் பாப்பேமா, நாஸ்காம் நிறுவனத்தின் இணை இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் தனித்திறமை நாட்டிற்கு பெருமை சேர்க்கும்!

சிறப்பு விருந்தினர் தாஹா மசாயுகி தன் சிறப்புரையில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது இண்டஸ்ட்ரி 4.0, செயற்கை நுண்ணறிவியல் மற்றும் இயந்திர கற்றல் ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து தொழில்நுட்ப உலகில், தொழில்நுட்ப கற்றலில் ஒரு முத்தாய்ப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே இணக்கமான வளர்ச்சி ஏற்படும் வகையில் உயர் கல்வி ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் புதுப்பொலிவு பெறும் எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களுடைய தனித் திறமை, வருங்கால உலகில் அந்தந்த நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகும். மேலும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதையும், அதன் மூலம் ஜப்பானிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் ஜப்பான் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புகள் படிப்பதற்கும் பெரும் வாய்ப்புகள் பெற்றுள்ளது என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வரும் 2020 ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு அற்ற சூழலை எட்டும் நோக்கில் கே.பி.ஆர் நிறுவனங்கள் பல்வேறு பசுமை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அனைத்து நவீன வசதிகளையும் கே.பி.ஆர் கொண்டுள்ளது!

மலேசிய நாட்டின் சன்வே பல்கலைக்கழகத்தினுடைய தலைவரும், துணை வேந்தருமான சிப்ரண்டேஸ் பாப்பேமா தம்முடைய பட்டமளிப்புவிழா உரையில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து நவீனமான வசதிகளையும், கற்றல், கற்பித்தல் முறைகளையும் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தன்னகத்தே கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப உலகில் நிலையான வளர்ச்சி பெறவும், தொடர்ந்து வளர்ச்சி பெறவும், ரோபோடிக்ஸ் துறையின் புதுவகை முன்னேற்றங்களும் தரவு பகுப்பாய்வு துறையில் பங்கும், செயற்கை நுண்ணறிவில் துறையின் பங்கும் இந்த நூற்றாண்டை மாற்றப் போவதாகவும் அதற்கான எல்லா வசதிகளையும் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தன்னகத்தே கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

திறனும், மேம்பாடும்:

இதைத் தொடர்ந்து இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நிறுவனத்தின் இணை இயக்குனர் உதயகுமார் பேசுகையில், ஒரு பொறியியல் கல்லூரி மாணவரை பணியமர்த்த தேவையான திறன், மேம்பாடு குறித்த அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் பெண் தொழிலாளர்கள் உயர்கல்விக்கும், பசுமை வளாகங்களை உருவாக்கி அதை பேணி வளர்ப்பதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை காணும் போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து ரோபாடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையினுடைய ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஜெர்மனியின் லூகாஸ் நல்லி நிறுவனத்தில் 3.32 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய உயர் ஆய்வு மையத்தையும் சிப்ரண்டேஸ் பாப்பேமா தொடக்கி வைத்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 759 இளங்கலை மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் தங்களுடைய பட்டங்களை பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஒவ்வொரு துறையின் தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுப் பத்திரமும், பதக்கமும் வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் அகிலா ஆண்டறிக்கையில் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும், இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் செயற்கை நுண்அறிவியல் துறையில் தொடர்ந்து தாங்கள் செய்து கொண்டு வரும் மேம்பாடுகள் குறித்தும், மாணவர்களுடைய முழுமையான கற்றலில் தாங்கள் செலுத்தி வரும் நோக்கம் குறித்தும், வேலைவாய்ப்பு தொடர்பான மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை வரவழைப்பது குறித்தும், மணவர்களுடைய ஒருமித்த வளர்ச்சிக்காக கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியுடன் அவருடைய ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.