ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் ரத்த தான உதவி எண் அறிமுகம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இரத்த தான உதவி அழைப்பு எண் ‘70105 37125’ அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ‘நாட்டு நலப்பணித் திட்ட தினம்’ கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட தினத்தின் முக்கிய நிகழ்வாக “ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இரத்த தான அமைப்பு” தொடங்கி வைக்கப்பட்டது. அதற்கான உதவி அழைப்பு எண் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன்படி இரத்த தானம் தேவைப்படுவோர் ‘70105 37125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நாகராஜன், சுபாஷினி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.