கோவையில் ஞாயிறு நடைபெறும் மாநில அளவிலான பிசியோ அரைஸ் நிகழ்ச்சி!

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

 

கோவை கொடீசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அரங்கில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி தினம் நாளை 25-9-2022, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதில் பிசியோ அரைஸ் – 2022 எனும் மாநில அளவிலான பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையிலான கலை மற்றும் அறிவியல் போட்டிகள் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்றத் உறுப்பினரும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ஆன நா.கார்த்திக் தெரிவித்தார்.