கே.எம்.சி.ஹெச் நர்சிங் கல்லூரியில் பயிலரங்கம்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் மருத்துவ அறுவை சிகிச்சை நர்சிங் துறை சார்பாக, பெரியோபரேட்டிவ் நர்சிங் பராமரிப்பு குறித்த மூன்று நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

இதன் துவக்கவிழாவில் பேராசிரியர் ஜெயலட்சுமி வரவேற்புரையாற்றினார். இதை தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி தனது உரையில், அறுவை சிகிச்சை செவிலியத்தில் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் முதல் நாளாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் ஆலோசகர் ஜெனரல் & லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேசன் ‘ரோபாட்டிக்ஸ் – புதிய அறுவை சிகிச்சை முறை’ என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக KMCH IHSR கிரிட்டிகல் கேர் சர்வீசஸ் இயக்குநர் & அவசர மருத்துவத்தில் இணைப் பேராசிரியர் செல்வராஜன் ‘பெரியபரேட்டிவ் நோயாளிகளின் பாதுகாப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள்’ பற்றிப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக KMCH OT இன்சார்ஜ் புஷ்பநாதன் ‘ஆப்பரேட்டிங் அறையின் அமைப்பு மற்றும் இயற்பியல் அமைப்பு’ என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்

KMCH IHSR OT இன்சார்ஜ் விஜயம்மாள் ‘அறுவை சிகிச்சைக்கு முந்தைய சரிபார்ப்புப் பட்டியல் – ஆபரேஷன் அறைக்குள்’ என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 105 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை அறையில் பாதுகாப்பு சோதனைகள், ஸ்க்ரப்பிங், கவுனிங் & க்ளோவிங், டேபிள்கள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு நோயாளிகளை நிலைநிறுத்துதல், தையல்கள் மற்றும் தையல் பொருட்கள் மற்றும் உடனடி அறுவை சிகிச்சைக்குப் பின் மேலாண்மை போன்ற பல்வேறு கூறுகள் குறித்த நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.