எஸ்.என்.எஸ் கல்லூரியில் ‘ஹவுஸ் ஆப் செஸ்னா’ விமான திறப்பு விழா

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் விமான பொறியியல் மற்றும் விண்வெளி பொறியியல் துறையில் ‘தி மார்வெல் விங்ஸ் – ஹவுஸ் ஆப் செஸ்னா’ என்னும் விமான திறப்பு விழா நடைபெற்றது

இதில் கிளைடர் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவர் கேப்டன் இரா பாலகுமாரன் மற்றும் கல்லூரியின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் புனரமைக்கப்பட்ட விமானத்தை திறந்து வைத்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறை வல்லுநர் ஜோதி சேகரன் (Project Head – R&D Hewlett packard Bangalore) முத்துசாமி (strategic Advisor and Transformation lead, PROCRAMA), கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன், துணை முதல்வர்கள் விவேகானந்தன், தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விமான பொறியியல் மற்றும் விண்வெளி பொறியியல் துறையின் துறைத்தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரை அளித்தார். முன்னாள் மாணவி சுவேதா (ஃப்ளைட் டிஸ்பாட்சர் கிளைடர் ஏவியேஷன், சென்னை) வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

மேலும், பிளானட் எக்ஸ் ஏவியேஷன் சர்வீசஸ் என்ற விமானத் துறை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.