தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 5 மாநிலங்களுக்கு இடையே தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டி மறைந்த ரோட்டரி சங்க உறுப்பினர் ரோட்டேரியன் டாக்டர் கிருஷ்ணானந்தா நினைவாக கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை என்ற பெயரில் நடைபெற்றது.

இந்த போட்டிகள் பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யலாயா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை ரோட்டரி மாவட்டம் 3201-ன், 2024 – 2025 ஆண்டுக்கான ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு துவக்கிவைத்தார்.

கௌரவ விருந்தினராக பி.சி.ஐ தலைவரும் அர்ஜுனா விருது பெற்றவருமான மகாதேவா மற்றும் வீல்சேர் பென்சிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா பொது செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பாராவாலிபால் போட்டியில் ஆண்களும், த்ரோபால் போட்டியில் பெண்களும் பங்கேற்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுசேரி மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து இதில் கொண்டனர்.

பாரா வாலிபால் ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து புதுச்சேரி அணியினர் விளையாடினார். இதில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது.

இரண்டாவதாக நடைபெற்ற பெண்கள் த்ரோபால் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியினர் விளையாடினார். இதில் அணி கர்நாடகா அணி வெற்றிபெற்றது.

இதில் வெற்றிபெற்ற பாரா வாலிபால் ஆண்கள் தமிழ்நாடு அணிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு பெற்ற ஆந்திரா மாநில அணிக்கு இரண்டாம் பரிசும் மூன்றாம் இடம் பெற்ற புதுச்சேரி அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு ரோட்டேரியன் டாக்டர். கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை, இந்திய வாலிபால் பாரா அசோசியேசனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இதே போல் பெண்கள் த்ரோபால் போட்டியில் வெற்றி பெற்ற கர்நாடகா அணிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு பெற்ற ஆந்திரா அணிக்கு இரண்டாம் பரிசும், மூன்றாம் இடம் பெற்ற தமிழ்நாடு அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை மற்றும் இந்திய வாலிபால் பாரா அசோசியேசனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.