இந்துஸ்தான் கல்லூரியின் ரோட்ராக்ட் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிவரும் இந்துஸ்தான் ரோட்ராக்ட் கிளப் தனது மூன்றாம் ஆண்டை தொடங்கும் விதமாக கிளப் உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவை வியூகம் என்ற தலைப்பில் நடத்தியது.

கல்லூரியின் முதல்வர் ஜெயா மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுனை சேர்ந்த பிரகாஷ் குட்டப்பன் மற்றும் துரைமுருகன் பக்க்ஷிராஜன் தலைமையில் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3201 செயலாளர் தங்கப்பாண்டியன் முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இந்துஸ்தான் ரோட்ராக்ட் அமைப்பின் சபை உறுப்பினர்களாக நிவேதா தலைவராகவும், கமலேஷ் செயலாளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் இந்துஸ்தான் ரோட்ராக்ட் அமைப்பின் லோகோ மற்றும் பேனர் ஆகியவற்றை விருந்தினர்கள் வெளியிட்டனர்.

மேலும், பலவித முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகளும் மற்றும் சேவைகளும் மாணவர்கள் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் வெளியிடப்பட்டன.

இதில் 7 0க்கும் மேற்பட்ட இந்துஸ்தான் ரோட்ராக்ட் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.