ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் லட்சுமி , கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர் விழி , ஹிதாயா மகளிர் கல்லூரி தலைவர் முகமது இஸ்மாயில் இம்தாதி கலந்து கொண்டு ஏழை ,எளிய மக்களுக்கு  தையல் இயந்திரத்தை வழங்கினார்கள் . இவ்விழா குறித்து   ஜமா அத்தே இஸ்மாயில் ஹிந்த் கோவை தலைவர் ஜனாப் பி.எஸ்.உமர் பாருக் கூறுகையில் ,  75-வது வருடமாக மக்கள் சேவையாற்றி வருவதாக கூறினார். ஏழை ,எளிய  மக்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் 50 க்கும் மேற்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு   வாடும் மக்களுக்காக இந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிதி திரட்டி வருகின்றனர் .திரட்டிய பிறகு கேரள மக்களுக்கு உதவ உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில்,  ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் ஷபீர் அலி கலந்து கொண்டார்.