டாடா மோட்டார்ஸ் விற்பனை 36% உயர்வு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் வாகனங்களின் மொத்த விற்பனை 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பு:

கடந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,843 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 57,995 வாகனங்களை நிறுவனம் விற்பனையானது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 36 சதவீதம் உயர்வு ஆகி உள்ளது.

உள்நாட்டு சந்தையில் கார்களின் விற்பனை கடந்த மாதம் 47,166 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்து விற்பனையான 28,018-உடன் ஒப்பிடுகையில் 68 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டு சந்தையில் வர்த்தக வாகன விற்பனை கடந்த மாதம் 29,313-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை யான 26,172 வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது 12 சதவீதம் அதிக மாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது