மிரட்டலாக வெளியான ‘சூர்யா 42’ மோஷன் போஸ்டர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் படு மிரட்டலாக வெளியாகியுள்ளது. இந்தப் படம், 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வரும் 13-ஆம் தேதி கோவாவில் தொடங்க உள்ளனர். அதில் சுமார் 250 காட்சிகள் படமாக்கப்பட யுள்ளது.

சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், சூர்யா 42 மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்று பின்னணியில் உருவாகும் அந்த படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என வருவதைப் பார்த்தால், இந்தப் படம் 5 சாம்ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் கதையாக வரலாற்றுப் பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வலிமை மிக்க வீரனாக சூர்யா மிரட்டுவார் என்பதற்கான அடையாளம் இருப்பதால் சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.