“உங்கள் விதியை நீங்களே தீர்மானியுங்கள்!”

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை பேரவைக்கூட்டம் பெற்றது.

இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் சண்முகப்பிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார்.

ஈரோடு, வி.இ.டி. கலை அறிவியல் நிறுவனத்தின் கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர் கார்த்திகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசியதாவது: உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்றால் நல்ல அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கவலை என்பது இருக்கக்கூடாது. சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. உங்கள் விதியை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

நல்ல குறிக்கோள், கடின உழைப்பு, நல்லொழுக்கம், தொடர்ந்து கற்றல், எதிலும் கவனம், பயப்படாமல் முடிவெடுத்தல், நற்சிந்தனை இவையனைத்தும் வெற்றிக்குரிய வழிகளாகும். எந்த செயலையும் நாளை என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தார். ‌